Tuesday, July 31, 2012

பாவை நியாஸின் பால்ய காலத்து நினைவுகள்

நெடுங்குளம் பள்ளியில் நான் ஏழாம் வகுப்பு படித்தபோது என்னுடன் தினகரன் என்ற மாணவன் படித்து வந்தான், அப்போது காலாண்டு பரீட்சை நடந்த சமயம், எங்களை கண்காணிப்பதற்கு 11 மற்றும் 12 ம் வகுப்புக்கான உயிரியல் ஆசிரியரை நியமித்திருந்தது பள்ளி நிர்வாகம். எங்கள் உயிரியல் ஆசிரியர் ஒரு முற்போக்குவாதி மற்றும் நாத்திகவாதி. முடி வெட்டாமல் சபரி மலைக்கு மாலை போட்ட மாணவ சாமியையும் அவரின் பிரம்பு பதம் பார்க்காமல் விடுவதில்லை. பள்ளியில் எந்த தேர்வு நடைபெறுகிறதோ அன்றைய தேர்வின் பெயரை விடைத்தாளின் மேல் எழுதுவது வழக்கம். நான் கேள்வித்தாளை பார்த்தவுடன், வலப்பக்க வயிறு லேசாக கலக்கியது, சுற்றி இருப்பவர்களை ஒரு முறை நோட்டம் விட்டேன். அனைவரும் படித்துவிட்டு வந்தவர்கள் போலவே ஒரு மாயை தோன்ற, சரி கொஞ்ச நஞ்சம் தெரிந்தவற்றை எப்படியாவது ஒப்பேத்திவிடலாம் என்றெண்ணி இரண்டு கேள்விகளுக்கு பதிலளித்து விட்டு நிமிர்கையில், தினகரனின் அலறல். உயிரியல் ஆசிரியர் தினகரனின் முதுகை உரித்துக் கொண்டிருந்தார். அனைவரும் தினகரனின் அடியிலேயே கவனம் இருந்ததால், என்னால் சிவகுரு நாதனின் 5 மதிப்பெண் பதில் இரண்டை காப்பி அடிக்க முடிந்தது. சிவகுரு நாதனும் அந்த அடியை ரசித்து பார்த்து கொண்டிருந்தான், ஆசிரியர் கரும்பலகையின் முன் வந்து நின்று, "அந்த நாதாரி போல யாராச்சும் எழுதிருக்கீங்களா?" என அடிவயிற்றிலிருந்து குரலெழுப்பினார். நாங்கள் என்னவென்று வினவ அஞ்சி விழித்துக்கொண்டிருக்க.. ஆசிரியரே முருகவேலை எழுப்பி இன்று என்ன பரீட்சை என கேட்டார். "இங்க்லீஷ் பரிச்ச சார்" என்றான். "அந்த நாதாரி ஆங்கிலம்னு தமிழ்ல எழுதி வச்சிருக்கு, நாதாரிகளா இங்க்லீஷ் பரிட்சைய தமிழ்ல எழுதுனா? தமிழ் பரிட்சைய இங்க்லீஷ்ல எழுதுவீங்களா?'' என கூறிவிட்டு ''வேற எவனாச்சும் அந்த மாதிரி எழுதி இருக்குறவன் எல்லாம் எழுந்து நில்லுங்க'' என கர்ஜித்தார். தொப்பென்று ஒரு மாணவன் மட மடவென சரிய மாணவர்கள் அனைவரும் ஓடிச்சென்று அவனை தூக்கினர், அவன் வேறு யாருமல்ல நான்தான். நாங்க எல்லாம் அப்பவே அப்பூடி...

Monday, September 26, 2011

திரும்பி வந்துவிடு என் துபாய் கணவா...

திரும்பி வந்துவிடு என் துபாய் கணவா...

வாழ்வின் அர்த்தம் புரிந்து வாழலாம்!


சத்தமில்லாமல் சமையலறை நுழைந்து முத்தம் கொடுத்துவிட்டு ஓடுகிறாய்!
என் பசி மறந்து உனக்காக காத்திருக்கும்பொழுது காத்திருக்கவேண்டாமென கண்டித்து விட்டு.. ஒரு கையால் இரு இதழுக்கு ஊட்டுகிறாய்!

சாதிச்சான்றிதழுக்காக லஞ்சம் கொடுத்துவிட்டு கெஞ்சுபவனைப்போல... மல்லிகைப்பூ தந்துவிட்டு மன்றாடுகிறாய்!
பள்ளிக்கு செல்லமறுத்து தூங்குவதாய் நடிக்கும் சின்னப்பையனைபோல... மடியில் படுத்துக்கொண்டு எழ மறுக்கிறாய்!



அம்மா வருவதாக பாசாங்கு செய்யும்பொழுது...



பதறி எழுந்து நிலை உணர்ந்து சிரிக்கிறாய் !
கை இழுத்து வைத்து குளிக்க வைக்க முயலும்போது

குளிரடிப்பதாய் கூறி - ஒரு குழந்தையை போல அழுகிறாய் !


மறைந்திருந்து கட்டிப்பிடிப்பாய்...

கையிலிருப்பதை தட்டிப்பறிப்பாய்

கெஞ்சுவதும்... மிஞ்சுவதும்...

அழுவதும்... அணைப்பதும்...

கண்டிப்பதும்... கண்ணடிப்பதும்...

இடைகிள்ளி... நகை சொல்லி...

அந்நேரம் சொல்வாயடா "அடி கள்ளி "

இவையெல்லாம் இரண்டே மாதம் தந்துவிட்டு...
எனை தீ தள்ளி வாழ்வள்ளி சென்றுவிட்டாய்...

என் துபாய் கணவா!

கணவா... - எல்லாமே கனவா.......?



கணவனோடு இரண்டு மாதம்...

கனவுகளோடு இருபத்தி இரண்டு மாதமா...?

12 வருடமொருமுறை குறிஞ்சிப்பூ ...

5 வருடமொருமுறை ஒலிம்பிக்....

4 வருடமொருமுறை உலககோப்பை கிரிக்கெட்... ...

2 வருடமொருமுறை கணவன் ...

நீளும் பட்டியலோடு நீயும் இணைந்துகொண்டாய்!

இது வரமா ..? சாபமா..?



அழகுக்காய் பிணத்தின் சாம்பலில்... முகம் பூசுவோர் உண்டோ ?

கண்களின் அழுகையை... கண்ணாடி தடுக்குமா கணவா?



நான் தாகத்தில் நிற்கிறேன் -
நீ கிணறு வெட்டுகிறாய்

நான் மோகத்தில் நிற்கிறேன் -
நீ விசாவை காட்டுகிறாய்.



திரும்பி வந்துவிடு என் துபாய் கணவா...

வாழ்வின் அர்த்தம் புரிந்து வாழலாம்

விட்டுகொடுத்து... தொட்டு பிடித்து...

தேவை அறிந்து...

சேவை புரிந்து...

உனக்காய் நான் விழித்து...

எனக்காக நீ உழைத்து...

தாமதத்தில் வரும் தவிப்பு...

தூங்குவதாய் உன் நடிப்பு...



வாரவிடுமுறையில் பிரியாணி...

காசில்லா நேரத்தில் பட்டினி...

இப்படி காமம் மட்டுமன்றி எல்லா உணர்ச்சிகளையும் நாம் பரிமாறிக்கொள்ளவேண்டும்.



இரண்டு மாதம்மட்டும் ஆடம்பரம் உறவு உல்லாச பயணம்..

பாசாங்கு வாழ்க்கை புளித்துவிட்டது கணவா!



தவணைமுறையில் வாழ்வதற்கு வாழ்க்கை என்ன வட்டிக்கடையா?

எப்பொழுதாவது வருவதற்கு நீ என்ன பாலை மழையா ?

இல்லை ஓட்டு வாங்கிய அரசியல்வாதியா ?

விரைவுத்தபாலில் காசோலை வரும் காதல் வருமா ?

பணத்தை தரும்... பாரத வங்கி ! பாசம் தருமா?



நீ இழுத்து செல்கின்ற பெட்டியோடு ஒட்டியிருக்கிறது என் இதயம்

அனுமதிக்கப்பட்ட எடையோடு அதிகமாகிவிட்டதால் விமான நிலையத்திலேயே விட்டுவிட்டாயோ என் இதயத்தை?

பித்தளையை எனக்கு பரிசளித்துவிட்டு... நீ தங்கம் தேடி துபாய் சென்றாயே?

பாலையில் நீ வறண்டது என் வாழ்வு!


வாழ்க்கை பட்டமரமாய் போன... பரிதாபம் புரியாமல் ஈச்சமரம் பக்கம் நின்று எடுத்த புகைப்படம் அனுப்புகிறாய்!




உன் துபாய் தேடுதலில்... தொலைந்து போனது - என் வாழ்க்கையல்லவா..?

விழித்துவிடு கணவா! விழித்து விடு -

அந்த கடவுச்சீட்டு வேண்டாம்... கிழித்துவிடு!

விசாரித்து விட்டு போகாதே கணவா..

விசா ரத்து செய்துவிட்டு வா!

(இல்லையேல் விவாக ரத்து செய்துவிட்டுப் போ...)

Friday, October 29, 2010

எமிரேட்ஸ் ஹுமர் கிளப்பின் சேட்டை அரங்கம்










துபாய் நகைச்சுவையாளர் மன்றத்தின் சார்பில் சேட்டை அரங்கம் நிகழ்ச்சி
அக்டோபர் முதல் தேதி அன்று ஆப்பிள் சர்வதேச பள்ளி கிஸ்அசில் நடந்தது.

Sunday, April 25, 2010

துபாய் போக்குவரத்து கழகம்............


துபாய் மிகவும் அழகான நகரம் , இங்கு வந்தால் நன்கு சம்பாதிக்கலாம் , கார்ஓட்டினால், பைக் ஓட்டினால், கணக்காளர் , சப்ப்ளையர் , ஏன் ரோடு சுத்தம்செய்பவர் கூட சம்பாதிக்கலாம் ஆனால், சம்பாதித்தை அப்படியே வீட்டுக்குஅனுப்பவது என்று கனவில் கூட கற்பனை செய்யாதீர்கள் ......... தங்குவதற்கும், சாப்பாட்டுக்கும் உங்களது சம்பளத்தில் பெரும் பகுதியை இழக்க வேண்டிஇருக்கும். வாகன ஓட்டிகள் தவிர ... ஏனென்றால் முழுவதையும் இழக்க நேரிடவேண்டி வரும். நான்கு இலக்கங்களில் வேண்டுமானால் சம்பளத்தைகௌரவமாக சொல்லி கொள்ளலாம். மிஞ்சுவது ஒன்றும் இல்லை என்பதே உண்மை. விதி மீறல்களுக்கும் , விபத்துக்களுக்கு கொடுக்கவே சரியாக இருக்கும் பொது எப்படி பணம் அனுப்புவது. துபாய் வாகன ஓட்டிகளே ............ பாதையில்சீராக செல்லவும் .... நாம் வந்த லட்சியங்களையும் , கடன்களையும், தம்பி , தங்கைகளின் எதிர் காலத்தையும் பெற்றோர்களின் வாழ்வாதாரத்தையும் எண்ணி கார் கைப்பிடியை தொடுவோமாக இனிமேலாவது ...............


இப்படிக்கு .
பாவட்டகுடி பாசமிகு நண்பன்,
உங்கள் நியாஸ் ...

Saturday, April 24, 2010

ஹாய் ஹாய் ஹாய் ..........

ஹலோ நண்பர்களே ..............

மீண்டும் உங்கள் நண்பன் திரும்பி விட்டான்...............

மீண்டும் உங்களுக்கு தொல்லை கொடுக்க ..............

மக்கள் தொண்டன் ,
மக்கள் சேவகன் ,
மக்களால் போற்றப்படும் மாமனிதன் ,
அன்பு நெஞ்சன்,
அஞ்சா சிங்கம்,
ஐடியா மணி ,
அழகு ராஜா,
பாயும் புலி,
பறக்கும் கில்லி,
உங்கள்.............................

பாவட்டகுடி நியாஸ் ...............

அழைக்கிறார் ...................

வாரீர் ! வாரீர் ! வாரீர் !
( பின் குறிப்பு )

எங்கே என கேட்க வேண்டாம் ...ச்ச்ச்ச் சும்மா ..................











Wednesday, June 3, 2009

ஓர் துயரச் செய்தி

அஸ்ஸலாமு அலைக்கும்

இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்

பாவட்டகுடியை சேர்ந்த ஹாஜி முகமது நேற்று ஒரு சாலை விபத்தில் வபாத் ஆனார் என்பதை வருத்தத்துடன் தெரிவித்து கொள்கிறோம், அவரது நல்லடக்கம் இன்று காலை நடை பெரும். அனைவரும் துவா செய்வோமாக.........


வருத்தத்துடன் ,

நியாஸ் அஹமது , துபாய்
பாவட்டகுடி

Tuesday, June 2, 2009

இரவு நேரம்



என்
ஓட்டைக் குடிசைக்குள்
நிலவின்
ஒளிபுகும் நேரமெல்லாம்
நான்
ஏட்டைக் கையில் பிடித்து
தமிழ்ப்
பாட்டை எழுதிக்கொண்டிருப்பேன்!

தனிமை
எனக்கு இனிமையானது!
தனிமைதான் எனக்குள்
தமிழ் சுரக்கும் நேரம்!

உலகம் உறங்கும் நேரம்
எனக்கு
உறக்கம் கலையும் நேரம்!
இரவுகளைக்கூட
உறங்க விடாது
நான்
கவிதைகளை பிரசவிக்கும்
களிப்பான நேரம்!

பகலில் உடைபட்ட
என்
உணர்ச்சிக் குமிழிகளை
இரவில்
கற்பனை ஊசியால்
கவிதை நூல் கொண்டு
தைக்கும் நேரம்!